Wednesday, February 14, 2007

காதலில் வெற்றி


கண்டதும் காதல், நம்பவில்லை நான்
ஆனால் அது உண்மை,
ஒரே நேரத்தில் இருவருக்குமே நேருமானால்.
காற்றை சுவாசிக்காதவர்கள் இல்லாதது போல்,
காதலைக் கடக்கதவர்கள் இருக்க முடியது

நானும் காதலைக் கடந்தேன்,ஆனால்
காதல் என்னை கடந்தது,
அதனால் காதல் பொய்யாகாது,
அந்தக் காதலில் இருந்தது உண்மையான அன்பு.

இன்று காதலுக்கு திருவிழா,
இது காலச்சர சீர்கேடு என்று யார் யாரோ கூறுகிறார்கள்,
இது உண்மையான காதலர்களுக்கு திருவிழா,
காதலின் புனிதத்தை கொச்சைப் படுத்தாதவர்களுக்கு.

ஒரு நாளில் கொண்டாடி முடியும் விஷயமல்ல,
அப்புறமேன் தனியாக ஒரு நாள்,
மதங்களுக்குள் பல
திருவிழாக்கள் இருப்பதுப் போல்,
மனங்களை இனைக்கும் காதலுக்கு ஒரு விழா இருப்பது தப்பில்லையே.

காதலின் வெற்றி என்ன - நண்பனிடம் என் கேள்வி,
திருமணம் - நண்பனின் பதில்.
சரி,
அந்த திருமணத்தில் வெற்றி யாருக்கு ஆணுக்கா இல்லை பெண்ணுக்கா - என் கேள்வி,
இது என்ன கேள்வி இருவருக்கும் தான் - பதில்.

இது சரியா...????

காதல் திருமணத்தில் இருவரில் ஒருவருக்கு மட்டுமே
வெற்றி என்பது என் கருத்து,
எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது,
சொல்கிறேன்.....

காதல் திருமணம் புரிந்து,
ஆண்டுகள் பல இல்லறம் நடத்தி,
குறைவில்லா குழந்தை பேறு பெற்று,
இளமையில் கொண்ட காதல்
முதுமையிலும் இம்மி மாறாமல்
இருக்கும் பொழுது........

தன் காதல் துணையை மறந்து,
முதலில் மரணத்தை தழுவுபவர், காதலில் தோல்வியுற்றவர் ஆகிறார்.
தன் துணையை இழந்த பின்னும்,
தன் துணையின் நினைவோடும், அந்த காதலின் நினைவோடும்,
வாழ்பவர் காதலில் வெற்றி அடைகிறார்.

இதுவே என் கருத்து.

"காதலர் தினம் வாழ்க"

"காதலர், தினம் வாழ்க"


கடைசியாக "Love make life perfect.........."

6 comments:

Anonymous said...

ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கீங்களே, என்ன ஆச்சு தீபக் ? "Love makes life perfect".. ‍ உங்கள் வாழ்க்கை 'Perfect' ஆவதற்கு வாழ்த்துக்கள்

PRINCENRSAMA said...

//தன் காதல் துணையை மறந்து,
முதலில் மரணத்தை தழுவுபவர், காதலில் தோல்வியுற்றவர் ஆகிறார்.
தன் துணையை இழந்த பின்னும்,
தன் துணையின் நினைவோடும், அந்த காதலின் நினைவோடும்,
வாழ்பவர் காதலில் வெற்றி அடைகிறார்.//

நெஞ்சைத் தொட்டுட்டியேப்பா!

Anonymous said...

really nice one...

Anonymous said...

superp da
-vijay

Anonymous said...

superp da
-vijay

Anonymous said...

superp da
-vijay