Friday, February 9, 2007

அஞ்சு வருசமா ஒரு வாக்கியத்துக்கு பொருள் தெரியலா... உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க....


அப்பொழுது நான் மதுரையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், நாகமலையில்(எங்கள் கல்லூரி மதுரையில் இருக்கும் இடம்) வீடு எடுத்து தங்கியிருந்தோம்.

அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு ஒய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் பெயர் திரு. குமாரசாமி(இவர் தான் இன்று நம் கதையின் நாயகன்). அவர் வீட்டின் கிழ் பகுதில் ஒரு பாதியில் நாங்கள் இருந்தோம், மேல் பகுதில் அவர் குடும்பம் இருந்தது.

கல்லூரி முடிந்து தினமும் மாலை வீட்டுக்கு வந்து ஒரு குட்டி தூக்கம் போடுவது என் வழக்கம், அன்றும் அப்படிதான் ஒரு சிறு உறக்கத்தில் இருந்தேன், அருகில் என் நண்பர்கள் விஜயும்,அருணும் எதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுது, ஆறு மணி அளவில் நடை பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார் குமாரசாமி, வாசலில் நின்றுக்கொண்டு, " விஜய் விஜய் " என்று கத்தினார், அதனை கேட்டு நான் விழித்துவிட்டேன், விஜய் அவரை பார்க்க வெளியே சென்றான்.

குமாரசாமி மிகவும் கோபமாக விஜயிடம், "ஏன்பா எத்தன தடவ உங்களுக்கு சொல்றது ஆறு மணி ஆச்சுனா வெளி லைட்டை போடுங்கணு, இப்ப பாரு மணி ஆறுக்கு மேலாச்சு இன்னும் நீ லைட்டை போடல, நீங்கள்ளாம் என்ன படிச்ச பிள்ளைகளோ" என்றார்.

(குறிப்பு :- அந்த லைட் எரிஞ்சா எங்க வீட்ல தன் பில் எகிறும், குமாரசாமி அந்த லைட சாயங்கலம் ஆறு மணிக்கு போட்டா இரவு பத்து மணிக்கு அணைக்கனும்பர். இதுக்கவே நாங்க லைட்டை போடமாட்டோம்).

கடைசியாக அவர் போகும் முன்பு ஒன்று சொன்னார், "விஜய் வாழ்க்கைல நம்பிக்கையிருக்கோ இல்லையோ ஒளியிருக்கனும்"னு சொன்னாரு. அதுக்கு பிறகு மிச்சமிருந்த ஒரு வருசமும், எங்ககிட்ட வந்து லைட போடுங்கணு சொல்லவேயில்ல.

இப்பொ என்னோட கேள்வி என்னனா "வாழ்க்கைல நம்பிக்கையிருக்கோ இல்லையோ ஒளியிருக்கனும்", அப்படின என்ன அர்த்தம், நானும் விஜயும் பல நாள், பல ஆங்கிள்ல யோசிச்சுப் பார்தோம், ம்ம்ம்ம்ம்ம் ஒன்னும் தேறல...

உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க, "வாழ்க்கைல நம்பிக்கையிருக்கோ இல்லையோ ஒளியிருக்கனும்" என்ன அர்த்தமுன்னு...

மறக்காமல் பதில் சொல்லவும்

1 comment:

கதிரவன் said...

"வாழ்க்கை ஒளிமயமா இருக்கும்கற நம்பிக்கை இருக்கோ இல்லியோ, நாம இருக்கற இடம் ஒளிமயமா இருக்கணும்.ம்ம்..இதுக்குத்தான் வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு வேணும்கறது.."ங்கற அர்த்தத்தில் சொல்லியிருப்பாரோ ?? குமாரசாமி அய்யா நம்பர் குடுங்க, அவர்ட்டயே கேட்ருவோம்.

அவர் இப்டி தத்துவத்தை உதிர்க்கற அளவுக்கு,அவருக்கு வேற ஏதாவது தொந்தரவு கொடுத்தீங்களோ ??