Thursday, May 17, 2007

நெடுங்குருதி


சிறிது காலத்திற்க்கு முன்னால் குறைந்து வந்த வாசிப்பு பழக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, இதற்க்கு இரண்டு உதரணங்கள், ஒன்று வருடம் தோரும் சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சி மற்றொன்று நான் தான்.

நெடுங்குருதி - நான் வாசித்த புத்தகங்களில், என்னை மிகவும் ஈர்த்த மற்றும் பாதித்த ஒன்று.

என்னிடம் ஒரு பழக்கமுண்டு, எந்த ஒரு புத்தகத்தையும் ஒரெ நாளில் வாசித்து முடிப்பதுதான் அது. நெடுங்குருதி நாவலை வாங்கும் போதே, அதன் தடிமனை வைத்து இந்த நாவலை முடிக்க எப்படியும் இரண்டு வாரமாவது ஆகும் என்று நினைத்தேன், ஆனால் கிட்டதட்ட ஆறு மாதங்களானது அதனை நிறைவுசெய்ய.


நெடுங்குருதி

வேம்பலை, இந்த கிராமத்தை மையமாக வைத்து தொடங்கும் கதை, முன்று வேறு வேறு காலகட்டங்களை தாண்டி இறுதியில் இதே கிராமத்தில் முடிவடைகிறது. வேம்பலை கிராமத்து மக்களின்(வேம்பர்கள்) பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்வியலை அப்படியே சித்தரிக்கும் நாவலிது.

ஆசிரியரின் கதை சொல்லும்விதம், கற்பனையும் தாண்டி நம்மை நிஜமாகவே வேம்பலைக்குள் இழுத்துச் செல்கிறது.

கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், கதை முடியும் வரை ந்ம்முடன் பயணிக்கிறார்கள். குறிப்பாக, நாகு. வேம்பலையை பற்றி ஆரம்பிக்கும் கதை, மெல்ல நாகுவை சுற்றி நகர்கிறது. அவனது பால்ய காலம் தொடங்கி, அவனது குடும்பம், வாலிபம், காதல், திருமணம் கடைசியாக அவனது மரணத்தில் முடிவடைகிறது. நம் கண் முன்னே வாழ்ந்து இறந்த ஒரு மனிதரை போல், நாவலை முடித்தபின்னும் நாகு நம்மைவிட்டு அகலாமல் இருக்கிறான்.

வேம்பலை கிராமத்தை பற்றி ஒவ்வொரு வரியில் படிக்கும் போதும் ஏதோ ஒன்று நம்மை பாதிக்கிறது, இது கற்பனையே என்றலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இது நாம் பார்க்காத ஒரு வரலாற்றின் காலச் சான்று.

வாய்புக்கிடைத்தால் வாசித்து பார்க்கவும் முழுமையக.....