Thursday, May 17, 2007

நெடுங்குருதி


சிறிது காலத்திற்க்கு முன்னால் குறைந்து வந்த வாசிப்பு பழக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, இதற்க்கு இரண்டு உதரணங்கள், ஒன்று வருடம் தோரும் சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சி மற்றொன்று நான் தான்.

நெடுங்குருதி - நான் வாசித்த புத்தகங்களில், என்னை மிகவும் ஈர்த்த மற்றும் பாதித்த ஒன்று.

என்னிடம் ஒரு பழக்கமுண்டு, எந்த ஒரு புத்தகத்தையும் ஒரெ நாளில் வாசித்து முடிப்பதுதான் அது. நெடுங்குருதி நாவலை வாங்கும் போதே, அதன் தடிமனை வைத்து இந்த நாவலை முடிக்க எப்படியும் இரண்டு வாரமாவது ஆகும் என்று நினைத்தேன், ஆனால் கிட்டதட்ட ஆறு மாதங்களானது அதனை நிறைவுசெய்ய.


நெடுங்குருதி

வேம்பலை, இந்த கிராமத்தை மையமாக வைத்து தொடங்கும் கதை, முன்று வேறு வேறு காலகட்டங்களை தாண்டி இறுதியில் இதே கிராமத்தில் முடிவடைகிறது. வேம்பலை கிராமத்து மக்களின்(வேம்பர்கள்) பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்வியலை அப்படியே சித்தரிக்கும் நாவலிது.

ஆசிரியரின் கதை சொல்லும்விதம், கற்பனையும் தாண்டி நம்மை நிஜமாகவே வேம்பலைக்குள் இழுத்துச் செல்கிறது.

கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், கதை முடியும் வரை ந்ம்முடன் பயணிக்கிறார்கள். குறிப்பாக, நாகு. வேம்பலையை பற்றி ஆரம்பிக்கும் கதை, மெல்ல நாகுவை சுற்றி நகர்கிறது. அவனது பால்ய காலம் தொடங்கி, அவனது குடும்பம், வாலிபம், காதல், திருமணம் கடைசியாக அவனது மரணத்தில் முடிவடைகிறது. நம் கண் முன்னே வாழ்ந்து இறந்த ஒரு மனிதரை போல், நாவலை முடித்தபின்னும் நாகு நம்மைவிட்டு அகலாமல் இருக்கிறான்.

வேம்பலை கிராமத்தை பற்றி ஒவ்வொரு வரியில் படிக்கும் போதும் ஏதோ ஒன்று நம்மை பாதிக்கிறது, இது கற்பனையே என்றலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இது நாம் பார்க்காத ஒரு வரலாற்றின் காலச் சான்று.

வாய்புக்கிடைத்தால் வாசித்து பார்க்கவும் முழுமையக.....


Friday, April 13, 2007

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இன்று ஒரு தகவல், தமிழ் வருடங்களை பற்றி

60 தமிழ் வருடங்களின் பெயர்கள்

01. பிரபவ 1987 - 1988
02. விபவ 1988 - 1989
03. சுக்ல 1989 - 1990
04. பிரமோதூத 1990 - 1991
05. பிரசோற்பத்தி 1991 - 1992
06. ஆங்கீரச 1992 - 1993
07. ஸ்ரீமுக 1993 - 1994
08. பவ 1994 - 1995
09. யுவ 1995 - 1996
10. தாது 1996 - 1997
11. ஈஸ்வர 1997 - 1998
12. வெகுதானிய 1998 - 1999
13. பிரமாதி 1999 - 2000
14. விக்கிரம 2000 - 2001
15. விஷு 2001 - 2002
16. சித்திரபானு 2002 - 2003
17. சுபானு 2003 - 2004
18. தாரண 2004 - 2005
19. பார்த்திப 2005 - 2006
20. விய 2006 - 2007
21. சர்வசித்து 2007 - 2008
22. சர்வதாரி 2008 - 2009
23. விரோதி 2009 - 2010
24. விக்ருதி 2010 - 2011
25. கர 2011 - 2012
26. நந்தன 2012 - 2013
27. விஜய 2013 - 2014
28. ஜய 2014 - 2015
29. மன்மத 2015 - 2016
30. துன்முகி 2016 - 2017
31. ஹேவிளம்பி 2017 - 2018
32. விளம்பி 2018 - 2019
33. விகாரி 2019 - 2020
34. சார்வரி 2020 - 2021
35. பிலவ 2021 - 2022
36. சுபகிருது 2022 - 2023
37. சோபகிருது 2023 - 2024
38. குரோதி 2024 - 2025
39. விசுவாசுவ 2025 - 2026
40. பரபாவ 2026 - 2027
41. பிலவங்க 2027 - 2028
42. கீலக 2028 - 2029
43. சௌமிய 2029 - 2030
44. சாதாரண 2030 - 2031
45. விரோதகிருது 2031 - 2032
46. பரிதாபி 2032 - 2033
47. பிரமாதீச 2033 - 2034
48. ஆனந்த 2034 - 2035
49. ராட்சச 2035 - 2036
50. நள 2036 - 2037
51. பிங்கள 2037 - 2038
52. காளயுக்தி 2038 - 2039
53. சித்தார்த்தி 2039 - 2040
54. ரௌத்திரி 2040 - 2041
55. துன்மதி 2041 - 2042
56. துந்துபி 2042 - 2043
57. ருத்ரோத்காரி 2043 - 2044
58. ரக்தாட்சி 2044 - 2045
59. குரோதன 2045 - 2046
60. அட்சய 2046 - 2047

மறுபடியும்
01. பிரபவ 2047 - 2048
........

Thursday, March 15, 2007

உலகக் கோப்பையை இந்தியா வாங்குமா.....!!!


இந்த உலகக் கோப்பையை கண்டிப்பா இந்தியா தான் வாங்கும்னு சொல்லிட்டு ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கு, அதுக்காக அவர்கள் ரொம்ப மெனக்கெட்டு பலவித R&D பண்ணின ஆய்வு முடிவு இங்கே உங்களுக்காக...

அணிகளின் சமீபத்திய வெற்றி, அணிகளின் வீரர்கள் நிலை, மைதானத்தின் நிலை, எதையுமே இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. பின்பு எப்படி தான் கணித்தார்கள்.

இப்படித் தான்....

ஆய்வு - 1

Year 1981
1. Prince Charles got married
2. Liverpool crowned Champions of Europe
3. Australia lost the Ashes
4. Pope Died
5. 2 years later India won the world Cup!!!

Year 2005
1. Prince Charles got married
2. Liverpool crowned Champions of Europe
3. Australia lost the Ashes
4. Pope Died
5. 2 years later will India win the world Cup?????


ஆய்வு -2

1982 Football World Cup won by Italy
1983 Cricket World Cup won by India

2006 Football World Cup won by Italy
2007 Cricket World Cup: INDIA ???


ஆய்வு - 3

1975 - West Indies
1979 - West Indies
1983 - India (Hat -trick breaker)


1999 - Australia
2003 - Australia
2007 - India ????????( will be a Hat-trick breaker once again)



இந்த ஆய்வு முடிவிலிருந்து என்ன தெரியுது உங்களுக்கு.
இந்தியா கோப்பையை வாங்குமா???????

இதல்லாம் இருக்கட்டும் நீங்க சொல்லுங்க,
1) இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி பெறப்போகும் இடம்.
2) எந்த நாலு அணிகள் அரையிறுதியில் விளையாடும்.
3) இறுதி போட்டியில் விளையாடப் போகும் இரண்டு அணிகள் எவை.
4) கோப்பையை வெல்ல போகும் அணி.


சரியாக பதில் சொல்பவர்களுக்கு, தக்க பரிசுகள் வழங்கப்படும்

Monday, March 12, 2007

Operation Autograph


போன வாரம் ஊருக்கு போயிருந்தேன், ஒன்னும் பெருசா விஷேசம் இல்லங்க, ரொம்ப வருசாம குல தெய்வ கோயிலுக்கு போகல அதான் அம்மா எனக்கு போன் பண்ணி, மாசி 11ம் தேதி நம்ம கோயில் சாமி கும்பிடுறது இருக்கு, அதிலும் ரொம்ப விஷேசமா இரண்டு குல தெய்வ கோயில்லயும் (அப்பா வழி மற்றும் அம்மா வழி) ஒரே நாள்ல திருவிழா இருக்கு, இந்த தடவை நீ அவசியம் வரனும், நாம இரண்டு கோயிலுக்கும் போறோம்னு சொன்னங்க.

நாமக்கு குல தெய்வ கோயிலுக்கு போறது ரொம்ப ஜாலியான ஒன்னு, ஏன்னா அம்மா வழி கோயிலுக்கு போன மாமா,அத்தை,மச்சான், மாமா பெண்ணு, தாத்தா,பாட்டினு இவுங்க எல்லாறையும் பார்க்கலாம்.

அதே சமயம், அப்பா வழி கோயிலுக்கு போன
சித்தப்பா, சித்தி, பங்காளிகள், தங்கச்சி,தாத்தா,பாட்டினு இவுங்க எல்லாறையும் பார்க்கலாம்.

அதனால, இந்த தடவை அவசியம் போகனும்னு முடிவு பண்ணி, எல்லாருக்கும் போன் போட்டு, "நா ஊருக்கு வர்ரேன்,நா ஊருக்கு வர்ரேன்" சொல்லிட்டேன்.

அம்மாவும், அப்பாவும் மதுரையில் உள்ள அத்தை வீட்டுக்கு வந்துவிட்டதால்,வியாழக்கிழமை இராத்திரி பெங்களுருவில் இருந்து பஸ் பிடித்து வெள்ளி காலை மதுரைக்கு போய்டேன்.

கொஞ்ச நேர தூங்கி எழுந்துட்டு, என்னம்மா இன்னைக்கு பிளான், எங்க எப்போ போரோம்னு அம்மாட்ட கேட்டேன், அதற்க்கு அம்மா, முதலில் சாலிச்சந்தை(அம்மா வழி கோயில்) அப்புறம் சிவகாசி(அப்பா வழி கோயில்).

பிளான் படி கிளம்பி மதியம் சுமார் 2 மணி அளவில் சாலிச்சந்தையை அடைந்தோம். அம்மா வழி சொந்தங்கள் அனைவரும் வந்துவிட எங்கள் கும்மாளம் ஆரம்பமானது. கொஞ்ச நேரத்தில் ஊர் பெருசு ஒருவர் மைக்கில் "ஆறு மணிக்கு அனைவரும் சாமிக் கும்பிடவருமாறு அழைத்தார்

ஆறு மணிக்கு அனைவரும் சன்னதியை அடைந்தோம், பூஜை ஆரம்பமானது. பூஜை துவங்கிய சில நிமிடங்களிலேயெ எங்கள் குடும்பத்தார் அமர்ந்துதிருந்த இடத்திற்க்கு அருகில் இருந்த ஒரு அம்மையார் மேல் ஆத்த வந்து இறங்கினாள்......."டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" ஒரு சவுண்டு மொத்த கூட்டமும் ஆடிப்போனது.

நாமக்கு சாமி நம்பிக்கையுன்டு ஆன, சாமியார் மற்றும் சாமியாடுறவங்க மேல சுத்தம நம்பிக்கையில்ல, சரி இந்த அம்மா என்னதான் செய்யிதுனு பாத்துக்கிட்டு இருந்தேன்.. சரியா இரண்டு நிமிஷம் கழிச்சு அந்த அம்மா அருகில் இருந்த தன் மகளை பார்த்து சாமியாடிக் கொண்டே "வாட்ச கழட்டு.... வாட்ச கழட்ட்ட்ட்ட்ட்ட்டுடுடுடுடுடு..." என்று கையை ஆட்டினர் அத நான் பார்த்துட்டேன்.

அப்பொழுது தோன்றிய தான் இந்த "Operation Autograph" idea (உபயம் :- ஹுட்ச் கலக்கபோவது யாரு ஈரோடு மகேஸ் - Vijay TV version) அதாவது, இப்போ இந்த அம்மாக்கிட்ட ஒரு பேப்பர்,பேனா குடுத்து கையெளுத்து போட சொன்னா, "பால்பழகாரி அம்மன்னு" போட்ட உண்மையான ஆத்தா, அப்படியில்லாம, அவுங்க பெயரயே கையெளுத்தா போட்ட இது போலிச் சாமி.

இத கேட்டவுடன் மாமா ஒருத்தரு உடனே, பேப்பரும் பேனாவும் கொடுத்து மாப்ளே இப்பொவே கையெளுத்து வாங்குட, இன்னைக்கு இரண்டுல ஒண்ணுப் பார்த்துடுவோம்னு கொஞ்சம் உசுப்பேத்திவிட, ஆயுதங்களுடன்(பேப்பர்,பேனா)ஆத்தாவை நெருங்கினேன்.

தன் கையிலிருந்து வாட்ச் கழட்டப்பட்டு இருந்ததால் அந்த அம்மா உச்ச நிலையில் சாமியாடிக் கொண்டுருந்தார். நான் அருகில் செல்ல செல்ல அவரின் வேகம் கூடியது, ஒரு நிலையில் தட்டில் இருந்த எலுமிச்சம்பழத்தை ஒன் ஒன்ன முழுதாக வாயில் போட்டுக் கடிக்க ஆரம்பித்தார்.

அடுத்ததாக தட்டிலிருந்து குங்குமத்தை எடுத்து ஒருவர் மீது தூவி நீ நெனச்சது நடக்கும்னு அருள் வாக்கு சொல்லிக் கொண்டுருந்தார்.

அதுவரை பொறுமையாக இருந்த என் அம்மா, என்கிட்ட வந்து, வேண்டாம்பா தெய்வ குத்தமாயிடும்னு சொல்லிட்டு, மாமாவை பார்த்து "அவன் தான் சின்ன பையன்(நான் தாங்க அந்த சின்ன பையன்) நீயும் அவன் கூட சேர்ந்து இப்படிப் பண்ணலாமா சும்மா இருங்கப்பா"னு சொல்லி பேப்பரையும்,பேனாவையும் வாங்கி வைத்து விட்டார்.

எங்க வீட்டு அரை டிக்கெட் ஒன்னு வந்து "போங்க மச்சான் நீங்க கண்டிப்பா கையெளுத்து வாங்குவீங்கனு நெனச்சென் இப்படி ஏமாத்திடிங்கலே... நீங்க வேஸ்டுனு" திரும்பவும் உசுப்பேத்திவிட.. வேண்டாம் பாப்பா நாம அடுத்த வருசம் வாங்குவோம்னு சொல்லி சமதானப்படுத்திவிட்டு இடத்தை காலி செய்தேன்.

நான் செய்தது சரியோ தப்போ, ஒரு கால் மணி அனைவரும் மகிழ்சியா இருந்தோம், அதனால் ஒரு முடிவுக்கு வந்தேன். அடுத்து செல்ல இருக்கின்ற சிவகாசி கோயிலிலும் இந்த "Operation Autograph" தொடரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

சிவகாசி நோக்கி பயனம் தொடங்கியது.....

(விஜய் டிவி குற்றம் நிகழ்ச்சி விளம்பரம் போல் படிக்கவும்)

சிவகாசியில் நடந்தது என்ன சிறப்பு அறிக்கை விரைவில் Operation Autograph-II

Wednesday, February 14, 2007

காதலில் வெற்றி


கண்டதும் காதல், நம்பவில்லை நான்
ஆனால் அது உண்மை,
ஒரே நேரத்தில் இருவருக்குமே நேருமானால்.
காற்றை சுவாசிக்காதவர்கள் இல்லாதது போல்,
காதலைக் கடக்கதவர்கள் இருக்க முடியது

நானும் காதலைக் கடந்தேன்,ஆனால்
காதல் என்னை கடந்தது,
அதனால் காதல் பொய்யாகாது,
அந்தக் காதலில் இருந்தது உண்மையான அன்பு.

இன்று காதலுக்கு திருவிழா,
இது காலச்சர சீர்கேடு என்று யார் யாரோ கூறுகிறார்கள்,
இது உண்மையான காதலர்களுக்கு திருவிழா,
காதலின் புனிதத்தை கொச்சைப் படுத்தாதவர்களுக்கு.

ஒரு நாளில் கொண்டாடி முடியும் விஷயமல்ல,
அப்புறமேன் தனியாக ஒரு நாள்,
மதங்களுக்குள் பல
திருவிழாக்கள் இருப்பதுப் போல்,
மனங்களை இனைக்கும் காதலுக்கு ஒரு விழா இருப்பது தப்பில்லையே.

காதலின் வெற்றி என்ன - நண்பனிடம் என் கேள்வி,
திருமணம் - நண்பனின் பதில்.
சரி,
அந்த திருமணத்தில் வெற்றி யாருக்கு ஆணுக்கா இல்லை பெண்ணுக்கா - என் கேள்வி,
இது என்ன கேள்வி இருவருக்கும் தான் - பதில்.

இது சரியா...????

காதல் திருமணத்தில் இருவரில் ஒருவருக்கு மட்டுமே
வெற்றி என்பது என் கருத்து,
எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது,
சொல்கிறேன்.....

காதல் திருமணம் புரிந்து,
ஆண்டுகள் பல இல்லறம் நடத்தி,
குறைவில்லா குழந்தை பேறு பெற்று,
இளமையில் கொண்ட காதல்
முதுமையிலும் இம்மி மாறாமல்
இருக்கும் பொழுது........

தன் காதல் துணையை மறந்து,
முதலில் மரணத்தை தழுவுபவர், காதலில் தோல்வியுற்றவர் ஆகிறார்.
தன் துணையை இழந்த பின்னும்,
தன் துணையின் நினைவோடும், அந்த காதலின் நினைவோடும்,
வாழ்பவர் காதலில் வெற்றி அடைகிறார்.

இதுவே என் கருத்து.

"காதலர் தினம் வாழ்க"

"காதலர், தினம் வாழ்க"


கடைசியாக "Love make life perfect.........."

Friday, February 9, 2007

அஞ்சு வருசமா ஒரு வாக்கியத்துக்கு பொருள் தெரியலா... உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க....


அப்பொழுது நான் மதுரையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், நாகமலையில்(எங்கள் கல்லூரி மதுரையில் இருக்கும் இடம்) வீடு எடுத்து தங்கியிருந்தோம்.

அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு ஒய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் பெயர் திரு. குமாரசாமி(இவர் தான் இன்று நம் கதையின் நாயகன்). அவர் வீட்டின் கிழ் பகுதில் ஒரு பாதியில் நாங்கள் இருந்தோம், மேல் பகுதில் அவர் குடும்பம் இருந்தது.

கல்லூரி முடிந்து தினமும் மாலை வீட்டுக்கு வந்து ஒரு குட்டி தூக்கம் போடுவது என் வழக்கம், அன்றும் அப்படிதான் ஒரு சிறு உறக்கத்தில் இருந்தேன், அருகில் என் நண்பர்கள் விஜயும்,அருணும் எதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுது, ஆறு மணி அளவில் நடை பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார் குமாரசாமி, வாசலில் நின்றுக்கொண்டு, " விஜய் விஜய் " என்று கத்தினார், அதனை கேட்டு நான் விழித்துவிட்டேன், விஜய் அவரை பார்க்க வெளியே சென்றான்.

குமாரசாமி மிகவும் கோபமாக விஜயிடம், "ஏன்பா எத்தன தடவ உங்களுக்கு சொல்றது ஆறு மணி ஆச்சுனா வெளி லைட்டை போடுங்கணு, இப்ப பாரு மணி ஆறுக்கு மேலாச்சு இன்னும் நீ லைட்டை போடல, நீங்கள்ளாம் என்ன படிச்ச பிள்ளைகளோ" என்றார்.

(குறிப்பு :- அந்த லைட் எரிஞ்சா எங்க வீட்ல தன் பில் எகிறும், குமாரசாமி அந்த லைட சாயங்கலம் ஆறு மணிக்கு போட்டா இரவு பத்து மணிக்கு அணைக்கனும்பர். இதுக்கவே நாங்க லைட்டை போடமாட்டோம்).

கடைசியாக அவர் போகும் முன்பு ஒன்று சொன்னார், "விஜய் வாழ்க்கைல நம்பிக்கையிருக்கோ இல்லையோ ஒளியிருக்கனும்"னு சொன்னாரு. அதுக்கு பிறகு மிச்சமிருந்த ஒரு வருசமும், எங்ககிட்ட வந்து லைட போடுங்கணு சொல்லவேயில்ல.

இப்பொ என்னோட கேள்வி என்னனா "வாழ்க்கைல நம்பிக்கையிருக்கோ இல்லையோ ஒளியிருக்கனும்", அப்படின என்ன அர்த்தம், நானும் விஜயும் பல நாள், பல ஆங்கிள்ல யோசிச்சுப் பார்தோம், ம்ம்ம்ம்ம்ம் ஒன்னும் தேறல...

உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க, "வாழ்க்கைல நம்பிக்கையிருக்கோ இல்லையோ ஒளியிருக்கனும்" என்ன அர்த்தமுன்னு...

மறக்காமல் பதில் சொல்லவும்

தூறல் - சிறுகதை

நெட்டில் நான் ரசித்த சிறுகதை, இங்கே உங்களுக்காக


தூறல்

டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது...

வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.

இந்த மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல... மழை வரலைனு யாகமெல்லாம் நடத்தறானுங்க... அங்க வராம இங்க வந்து நம்ம உயிர வாங்குது. அதுவும் ஆபிஸ் போற நேரத்துல.

அருகே கம்பெனி ஐடி கார்டை மாட்டிக் கொண்டு நான்கு, ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இவனுங்களுக்கு எல்லாம் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியர்னு பெருமை. இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க.

கடைசியாக சுரிதார் அணிந்து கொண்டு புதிதாக ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை பார்த்து சிரித்தாள்.

ச்சீ என்ன பொண்ணு இவ... யாராவது பார்த்தா... உடனே சிரிக்கணுமா???

பஸ் வந்தவுடன் வேகமாக சென்று ஒரு நல்ல இடம் பார்த்து ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தேன்... i-podல் நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

சரியாக எட்டு மணிக்கு என் சீட்டிலிருந்தேன்... வழக்கம் போல் யாரும் இன்னும் வரவில்லை. இன்று அப்ரைசல் வேறு இருக்கிறது. இந்த முறை ஆன் சைட்டிலிருந்து அப்ரிஸியேஷன் மெயில் வந்திருக்கிறது. அதனால் எப்படியும் இந்த முறை நல்ல ரேட்டிங் கிடைக்கும்.

மேனேஜர் சரியாக பத்து மணிக்கு வந்தார். மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரை பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களை கேட்டால் டிராபிக் ஜாம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி தப்பிவிடுவார்கள். 7 மணிக்கு புறப்பட்டால் எப்படியும் 8 மணிக்குள் வர முடியும். 8 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி வரவே அனைவரும் விரும்புகின்றனர். தலை சரியில்லாத இடத்தில் மற்றவர்களை சொல்லி பயனில்லை.

சரியாக 11 மணிக்கு அப்ரைசல் மீட்டிங். தேவையானவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு மீட்டிங்கிற்கு சென்றேன். உள்ளே மேனஜர் தயாராக இருந்தார். இந்த முறையும் அப்ரைசலில் எல்லா டாஸ்கிற்கும் "C" போட்டிருந்தார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம் டீம் மக்களோடு சரியாக கலக்காமலிருக்கிறேனாம்.

சரியாக வேலை செய்யவில்லை என்றால் சரி. ஆனால் மக்களோடு பழகவில்லை என்று அவர் சொல்வது சும்மா ஒரு சப்பைக்கட்டு!!! இவர்கள் வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் உண்மையாக வேலை செய்பவர்களை என்றும் மதிக்கமாட்டார்கள்.

மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பிட கிளம்பினேன்.

"கார்த்திக்... இன்னைக்கு பிராஜக்ட் பார்ட்டி. பஸ் 12:30க்கு வரும். இப்ப எங்க போற?" அக்கரையாக விசாரித்தாள் ஹாசினி.

"சாரி... நான் வரலை. நான் தான் மெயில்லையே சொல்லிட்டனே... எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் பிடிக்காதுனு" சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட சென்றேன்.

சாப்பிட்டுவிட்டு என் சீட்டிற்கு வந்த போழுது என் ப்ளோர் முழுதும் விரிச்சோடி கிடந்தது. 2 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டில் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் கிடைத்த ஒரு ஆங்கில நாவல் படிக்க ஆரம்பித்தேன். எப்போழுது தூங்கினேனென்றே தெரியவில்லை. தூங்கி எழுந்திரிக்கும் பொழுது மணி 8 ஆகியிருந்தது.

அருகே இருக்கும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். டிவியை ஆன் செய்து ஒரு மணி நேரத்தில் 120 சேனல்களையும் 40 முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். 6 மணிக்கு அலாரம் அதன் வேலையை சரியாக செய்ய 7 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்தேன்.

வழக்கம் போல் பஸ்ஸிற்காக காத்திருப்பவர்கள் இருந்தார்கள். நேற்று புதிதாக வந்திருந்தவளும் அங்கே நின்று கொண்டிருந்தாள். நேற்றை போலவே இன்றும் பார்த்து சிரித்தாள்.

பஸ் வந்ததும் வழக்கம் போல் ஜன்னலோர சீட்டருகே சென்று அமர்ந்தேன்.

"ஹாய்... நான் இங்க உக்காரலாமா?" ஒரு பெண்ணின் குரல்.
திரும்பி பார்த்தேன். அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்.

வழக்கத்தைவிட i-podல் சத்தத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினேன். அதை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் ஒரு ஆங்கில நாவலை கையில் வைத்து படிக்க ஆரம்பித்தாள். வண்டி வழக்கத்தைவிட சீக்கிரம் சென்றாலும் ஏதோ ஒரு யுகம் போனது போலிருந்தது.

தினம் செய்யும் வேலையையே செக்குமாடு போல் செய்துவிட்டு 8 மணிக்கு ஆபிஸிலிருந்து வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாளும் அதை போலவே என் அருகில் அமர்ந்து பயணம் செய்தாள். இதுவே ஒரு வாரம் தொடர்ந்தது.

அன்றும் லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நடைபாதையிலிருந்து கீழிறங்கி பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். வலதுபக்கம் நின்றிருந்த ஒரு ஜோடி ரோட்டில் நிற்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் கையை ஒருவர் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் கோபம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வந்தது.

இதுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு. இதுங்களாலதான் எல்லாருக்கும் கெட்டப்பேரு!!! திடிரென்று யாரோ என் கையை பிடித்து பின்னால் இழுத்தார்கள். திரும்பி பார்ப்பதற்குள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கொஞ்சமிருந்தால் மேலே ஏத்தியிருப்பான். இந்த பெங்களூர்ல ஆட்டோக்காரங்களுக்கு அறிவே இருக்காது.

சரி, பின்னால் இழுத்தது யாரென்று பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். சைட்ல இருந்த அந்த ஜோடியப் பாத்துட்டிருந்த நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கு நன்றி சொல்லலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பஸ் வந்து சேர்ந்தது.

எப்போழுதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தேன். அவளும் வந்து அமர்ந்து கையில் நாவலை எடுத்தாள்.

"ரொம்ப தேங்கஸ்ங்க..." தயங்கியவாறே சொன்னேன்.

"ஓ!!! உங்களுக்கு பேச வருமா??? நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்" புத்தகத்தை பையில் வைத்து கொண்டே சொன்னாள்.

"இல்லைங்க...சாரி. நான் உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேனு நினைக்கிறேன்"

"ஐயய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க...
பை த வே, ஐ அம் ஆர்த்தி"

"ஐ அம் கார்த்திக்"

இன்று பஸ் பயணத்தின் 60 நிமிடங்களும் 60 நொடிகளைவிட குறைவாக தெரிந்தது. 60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன்.

பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன்...

"கார்த்திக்... உன் கூட நான் சாப்பிட வரலாமா? தனியா சாப்பிட போர் அடிக்குது. என் டீமெட்ஸ் எல்லாம் பத்து மணிக்குதான் வருவாங்க"

"உங்களுக்கு எதுவும் பிராபளம் இல்லைனா வாங்க"

"ஏன் ரொம்ப ஃபார்மலா பேசறீங்க??? நீ, வா, போனே பேசலாம்"

"சரிங்க"

"பாத்திங்களா??? திரும்பவும் வாங்க போங்கனு சொல்றீங்க"

"சரி... போலாமா?"

சாப்பிட்டு விட்டு சீட்டிற்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இன்று நாள் போனதே தெரியவில்லை.

அடுத்த நாள் மீண்டும் பஸ் பயணம்...

"ஏய்!!! நேத்து மதியம் உன்ன கேண்டின்ல பாத்தேன்... தனியா சாப்பிட்டு இருந்த... உன் பிராஜக்ட் மேட்ஸ் யாரும் வரலையா?"

"நான் எப்பவும் தனியாதான் சாப்பிடுவேன்"

"ஏன்?"

"யாருக்கும் தொந்தரவு வேண்டாம்னுதான். எனக்கு உங்களை மாதிரி எல்லாம் பேச வராது"

"யார் சொன்னா அப்படியெல்லாம். என் கூட வேணா வரியா?"

"வேணாம். உங்கூட உன் பிரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க. எனக்கு அன்கம்ஃபர்டபுலா இருக்கும்"

"இல்ல... யாரும் வர மாட்டாங்க. உன் செல் நம்பர் தா. நான் மதியம் கூப்பிடறேன்"

"ஏன்கிட்ட செல் போன் இல்ல"

"என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?"

"3 வருஷம். ஏன் செல் போன் இல்லனா வாழ முடியாதா? எனக்கு தான் எக்ஸ்டென்ஷன் இருக்கு இல்ல. அதுக்கே எவனும் கூப்பிட மாட்டான். எனக்கு எதுக்கு செல் போன்? எப்பவாவது ஊர்ல இருந்து கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்"

"சரி உன் எக்ஸ்டென்ஷன் சொல்லு... " குறித்து கொண்டாள்

காலையும், மதியமும் அவளுடன் சாப்பிட்டேன்... இன்றும் நாள் பொனதே தெரியவில்லை.

அடுத்த நாள்...

"ஏன் இப்படி வயசானவன் மாதிரி டல் கலர்ல சட்டை போடற??? ஒழுங்கா ப்ரைட்டா சட்டை போட்டா என்ன?"

"ஏன் இந்த கலர்க்கு என்ன குறைச்சல். நான் பொதுவா கலரே பாக்க மாட்டேன். போய் எது பிடிச்சியிருந்தாலும் எடுத்துக்குவேன்"

"சரி... இந்த வாரம் நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம். உனக்கு செல் போன் வாங்கனும்.. அப்பறம் நல்லதா ஒரு நாலு அஞ்சு சட்டை வாங்கனும்"

"எனக்கு எதுக்கு செல் போனெல்லாம்?"

"நேத்து நைட் உங்கிட்ட பேசலாம்னு பாத்தேன்... ஆனால் உங்கிட்ட போன் இல்லாததால பேச முடியல"

"நிஜமாவா?"

"ஆமாம்... சத்தியமா!!! இந்த வாரம் கண்டிப்பா போய் வாங்கறோம்"

"சரி..."

வார இறுதியன்று கடைக்கு சென்றோம்...

"லேட்டஸ்ட் மாடலா பாத்து வாங்கிக்கோ... இல்லைனா பின்னாடி மாத்த வெண்டியிருக்கும்"

"எனக்கு சாதரண மாடலே போதும்... காஸ்ட்லியா எல்லாம் வேண்டாம்"

"நீ சும்மா இரு...நான் செலக்ட் பண்றேன்... உனக்கு ஒன்னும் தெரியாது"

"சரிங்க... நீங்களே எடுங்க"

கடைசியாக பத்தாயிரத்தி சொச்சத்திற்கு ஒரு செல் பொன் வாங்கி ஏர்டெல் கனெக்ஷனும் வாங்கினேன். அதிலிருந்து அவள் நம்பருக்கு போன் செய்து அவள் போனை என்னிடம் குடுத்து பேச சொன்னாள். பக்கத்து பக்கத்துல இருந்து செல் பொனில் பேசுவது அசிங்கமாக இருந்தது... ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை.

"பாத்தியா... உன் போன்ல ஃபர்ஸ்ட் பேசனது நான் தான், ஃப்ர்ஸ்ட் பண்ணது என் நம்பருக்குத்தான்"

"சரி சரி... எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க... வா போகலாம்"

அன்றே 5 புது சட்டைகள் வாங்கினோம். ஒவ்வொன்றும் 1500க்கு மேல்.

வீட்டிற்கு சென்றவுடன் போன் செய்து பேசினாள்...

திங்கள் காலை அலுவலகத்தில்

"கார்த்திக்... புது சட்டையெல்லாம் சூப்பரா இருக்கு...கைல ஏதோ செல் போன் மாதிரி இருக்கு" ஹாசினி

"ஆமாம்... நேத்துதான் வாங்கினேன்"

"எங்களுக்கு எல்லாம் நம்பர் தர மாட்டீங்களா?" ராஜிவ்

"உங்களுக்கு இல்லாமலா... இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க..."
அனைவரும் அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.

ஆர்த்தியிடமிருந்து 11 மணிக்கு போன் வந்தது.

"கார்த்திக்... இன்னைக்கு எனக்கு பிராஜக்ட் பார்ட்டி...
நான் மதியம் உங்கூட லஞ்ச்க்கு வர முடியாது. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ"

"ஓகே... நான் பாத்துக்கறேன்"

"கார்த்திக்... புது போனெல்லாம் வாங்கியிருக்கீங்க... ஏதாவது விசேஷமா?" மேனஜர் குரல் பின்னாலிருந்து வந்தது.

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க... சும்மா வாங்கனும்னு தோனுச்சு... வாங்கிட்டேன்"

"சரி... இன்னைக்கு டீம் லஞ்ச்... எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்னு பிளான். நீயும் கண்டிப்பா வரணும்"

"ஷுர்... கண்டிப்பா வரேன்"

மதியம் அனைவரிடமும் நன்றாக பேசினேன்... எல்லாரும் எவ்வளவு ஜாலியா பேசறாங்க... நான் ஏன் இத்தனை நாள் இப்படி பேசாம போனேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருந்தனோனு தோனுச்சு...

வாழ்க்கையில் ஏதோ பெரிய மாற்றம் நடந்த மாதிரி இருந்தது.

ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. டீமில் அனைவரும் இப்போது நல்ல நண்பர்களாகி விட்டனர். 5 நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது போல் தோன்றியது. அனைத்து மாற்றத்திற்கும் காரணம் ஆர்த்திதான்.

"கார்த்திக் நான் இந்த வீக் எண்ட் சென்னை போறேன்... எப்ப வருவேன்னு தெரியாது. கொஞ்சம் லேட்டானாலும் ஆகலாம். நீ இதே மாதிரி இருக்கணும். ஓகேவா?"

"ஏன் இப்படி சொல்ற? ஏதாவது பிரச்சனையா?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல... எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... அதனால சொன்னேன்"

"சரி... அப்ப அப்ப போன் பண்ணு"

"கண்டிப்பா பண்றேன்"

அவள் சென்றதிலிருந்து முதல் இரண்டு, மூன்று நாட்கள் வேலை செய்யவே முடியவில்லை. பிறகு ஓரளவு சமாளித்தேன். ஒரு வாரம் ஓடியது.
அவளிடமிருந்து போனும் வரவில்லை. அவளும் வரவில்லை. ஒரு மாதமாகிய நிலையில் போன் வந்தது.

"ஹலோ கார்த்திக்கா???"

"ஆமாம். நீங்க யார் பேசறது?"

"நான் ஆர்த்தியோட அண்ணன் பேசறேன்... நீங்க சென்னை அப்போலோ வர முடியுமா? ஆர்த்தி கடைசியா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்" அவர் குரலில் நடுக்கம் தெரிந்தது

"கடைசியா???" இந்த வார்த்தையை கேட்டவுடன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது.
"ஆர்த்திக்கு என்னாச்சு???"

"நீங்க இங்க வாங்க... அத சொல்ற நிலைமைல நாங்க இல்ல... சென்னை வந்தவுடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க... நான் வந்து உங்களை பிக்-அப் பண்ணிக்கிறேன்"

அந்த நம்பர் மனதில் பதிந்தது...

சென்னைக்கு அப்போழுதே நேராக புறப்பட்டேன்...

ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார் ஆர்த்தியின் அண்ணன். அவளுக்கு ஸ்பைனல் கார்டில் ஏதோ பிரச்சனையாம். ஒரு வருடமாக ட்ரீட்மெண்ட் செய்து வந்தார்களாம். சரியாகிவிடும் என்று அனைத்து டாக்டர்களும் நம்பிக்கையூட்டிய நிலையில் திடீரென்று அவள் மூளையை பாதித்துவிட்டதாம். எனக்கு எதுவும் விளங்கவில்லை. புதுப்புது வார்த்தைகள். புது உலகம்.

ஹாஸ்பிட்டலில் காய்ந்து போனா பூச்சரமாக இருந்தாள் ஆர்த்தி. ஆனாலும் வாசம் மறையவில்லை. ஓரளவு பேசும் நிலைதான்... என்னை விட்டுவிட்டு அவள் அண்ணன் டாக்டரை பார்க்க சென்றார்.

எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.

"கார்த்தி... அழுவாத!!! எனக்கு கஷ்டமா இருக்கு"

"ஏன் ஆர்த்தி? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல"

"நான் எப்படியும் பொழைக்க மாட்டேனு தெரியும். ஆனா எங்க வீட்லதான் ரொம்ப நம்பிட்டு இருந்தாங்க. இங்க எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்கனுதான் நான் பெங்களுருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்"
ஒரு நிமிட அமைதிக்கு பிறகு தொடர்ந்தாள்

"அன்னைக்கு உன்ன முதல் தடவை பார்க்கும் போதே... உன் கண்ல ஒரு விரக்தி தெரிஞ்சிது. வாழ்க்கையோட அருமை உனக்கு தெரியலனு என் மனசுல பட்டுச்சு. சரி நான் சாவறத்துக்குள்ள உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னுதான் உன்கூட பேச ஆரம்பிச்சேன். போக போக உன்கூட பேசறதே எனக்கு ரொம்ப சந்தோஷத்த குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உங்கிட்ட சொல்லி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லல."

"ஆர்த்தி... உனக்கு ஒன்னும் ஆகாது. நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்ட"

"ஆமாம். நான் எங்கயும் போக மாட்டேன் கார்த்திக்...
நீ பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி... என்ன சரியா???"

ஒரு வாரம் சென்னையில் தங்கிவிட்டு வந்தேன்...

காலை 7 மணி...

வழக்கம் போல் லேசாக தூறல் போட்டு கொண்டிருந்தது. பஸ் வந்தவுடன் ஏறினேன்.

"ஹாய்... நான் இங்க உக்காரலாமா?"

"தாராளமா"

"என் பேர் கார்த்திக்..."

"நான் பாலாஜி..."

(ஆர்த்தியுடன் பேசி கொண்டிருந்தேன்...)