Saturday, January 6, 2007

பொங்கல் தலைப்பு பற்றி

என்னடா இவன் இதுக்கு பொங்கல்னு பேரு வச்சுருக்கனு நீங்க நினைக்கலாம், அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. இப்படி ஒரு வலை பகுதி தொடங்க முடிவு செய்தவுடன், இதற்கு பெயர் வைப்பதில் மிகவும் குழம்பிவிட்டேன், பிறகு இந்த வலை பகுதியின் நோக்கம் முடிவான பின் இதற்கு "பொங்கல்" தான் சரியான பெயர் என்ற முடிவுக்கு வந்தேன்.

"பொங்கல்" பெயர் காரணம்

சுமார் மூன்று வருடம் முன்பு,ஒரு நாள் கல்லூரி எதிரில் உள்ள ஒட்டல் ஒன்றில், நானும் எனது நண்பர்கள் அசோக்கும், விஜயும் காலை வேளையில் சாப்பிட காத்து இருந்தோம், எங்களுக்கு அருகில் ஒரு பெரியவர் ஒருவரும் இருந்தார். அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஒன்று தோன்றியது, உடனே நான் அருகில் இருந்த விஜயிடன் கேட்டேன் இதற்கு ஏன் பொங்கல் என்று பெயர் வந்தது தெரியுமா என(அருகில் அமர்ந்து பொஙகல் சாப்பிட்டு கொண்டிருந்த பெரியவரை பார்த்து) அவன் தெரியலடா நீயே சொல்லுடா என்றான்(ஹா ஹா என் அறிவுக்கு கிடைத்த வெற்றி என மனதில் நினைத்து கொண்டேன்)பிறகு அவனே சொன்னா இந்த மாதிரி கேள்வி எல்லாம் எப்படிடா உனக்கு மட்டும் வருது......(வஞ்ச புகழ்ச்சி).

இப்போ இவனுக்கு பதில சொல்லனும் இல்லனா கண்டிப்பா அடிப்பான், என்னடா பண்றது என் கற்பனை குதிரையை ஒடவிட்டேன்......... பதிலும் கிடைத்தது, அருகில் இருந்த பெரியவரை பார்த்துக் கொண்டே, முன் எல்லாம் வீட்டில் கல் அடுப்பு வைத்துதான் சமையல் செய்வார்கள், அப்படி ஒரு நாள் முதன் முதலில் பானையில் சமைக்கும் போது, அந்த பானையில் இருந்து அரிசி பொங்கி கிழே இருந்த கல்லில் விழுந்ததால் அது பொங்கல் ஆயிற்று என்றேன் (பொங்கி கல்லில் விழுந்ததால் பொங்கல்...... கலக்கிட்டடா என்று மனதில் நினைத்து கொண்டேன்)....

இதனை பொறுமையுடன் கேட்டு கொண்டு இருந்த பெரியவர் மிகுந்த கோபத்துடன், என்னை பார்த்து, தம்பி தெரியலனா சும்மா இருக்கனும், இப்படி வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசக்கூடாது என்று என்னிடம் கூறினார்.

என்னுடைய பொங்கல் பதிலை கேட்டு, அந்த பெரியவரை தவிர ஒட்டலில் எங்கள் அருகில் இருந்த அணைவரும் சிரித்தார்கள்.

அன்று முதல் எங்கள் நண்பர்கள் மத்தியில், எவனாவது(இதில் அடியேனுக்கு முதல் இடம்) ரீல் விட ஆரம்பித்தால் உடனே, போதும் உன் பொங்கலை நிறுத்துடா என சொல்வது வாடிக்கையாகிவிட்டது.

இதுபோல் பல பொங்கல்களையும், மற்றும் நான் ரசித்த கதை, கவிதை, சினிமா மற்றும் உலக நடப்புகளை உங்களுடன் கலகலப்புடன் பகிர்ந்து உரையாடத்தான் இந்த வலை பகுதி.

மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

பொங்கல் தொடரும்.............

5 comments:

PRINCENRSAMA said...

உங்க பதிவுக்கு பதில் பதிவு போடுறதுக்கு முன்னாடி, என் பதிவுக்கு வந்து பார்த்து பதிவு(மறுமொழி) போடுங்க...
என்னதான் நீங்க கல்லூரியில எனக்கு சீனியரா இருந்தாலும், பதிவர் வட்டத்தில (Blogger) நான்தான் சீனியர்.

இருந்தாலும் பரவாயில்லை... வழக்கம் போல தீபக்குக்கே உள்ள குசும்பு தெரியுது... தொடர்ந்து பதிவிடுங்க...நாங்க பதிலிடுறோம்.

PRINCENRSAMA said...

coke-rocket.blogspot.com
princenrsama.blogspot.com
இதுவும் என் வலைப்பூக்கள் தான்.

கதிரவன் said...

தீபக்,

இதுதான் உங்க 'பொங்கலா'!! நல்லா இருக்கு.தொடருங்கள்..வாழ்த்துக்கள் !! 'பொங்கலுக்கு' லீவு விடாமல் அடிக்கடி எழுதுங்கள்

vijay said...

dai.....
arambitchuttiya un pongala....!

vijay said...

pongalo pongal machi..!