போன வாரம் ஊருக்கு போயிருந்தேன், ஒன்னும் பெருசா விஷேசம் இல்லங்க, ரொம்ப வருசாம குல தெய்வ கோயிலுக்கு போகல அதான் அம்மா எனக்கு போன் பண்ணி, மாசி 11ம் தேதி நம்ம கோயில் சாமி கும்பிடுறது இருக்கு, அதிலும் ரொம்ப விஷேசமா இரண்டு குல தெய்வ கோயில்லயும் (அப்பா வழி மற்றும் அம்மா வழி) ஒரே நாள்ல திருவிழா இருக்கு, இந்த தடவை நீ அவசியம் வரனும், நாம இரண்டு கோயிலுக்கும் போறோம்னு சொன்னங்க.
நாமக்கு குல தெய்வ கோயிலுக்கு போறது ரொம்ப ஜாலியான ஒன்னு, ஏன்னா அம்மா வழி கோயிலுக்கு போன மாமா,அத்தை,மச்சான், மாமா பெண்ணு, தாத்தா,பாட்டினு இவுங்க எல்லாறையும் பார்க்கலாம்.
அதே சமயம், அப்பா வழி கோயிலுக்கு போன
சித்தப்பா, சித்தி, பங்காளிகள், தங்கச்சி,தாத்தா,பாட்டினு இவுங்க எல்லாறையும் பார்க்கலாம்.
அதனால, இந்த தடவை அவசியம் போகனும்னு முடிவு பண்ணி, எல்லாருக்கும் போன் போட்டு, "நா ஊருக்கு வர்ரேன்,நா ஊருக்கு வர்ரேன்" சொல்லிட்டேன்.
அம்மாவும், அப்பாவும் மதுரையில் உள்ள அத்தை வீட்டுக்கு வந்துவிட்டதால்,வியாழக்கிழமை இராத்திரி பெங்களுருவில் இருந்து பஸ் பிடித்து வெள்ளி காலை மதுரைக்கு போய்டேன்.
கொஞ்ச நேர தூங்கி எழுந்துட்டு, என்னம்மா இன்னைக்கு பிளான், எங்க எப்போ போரோம்னு அம்மாட்ட கேட்டேன், அதற்க்கு அம்மா, முதலில் சாலிச்சந்தை(அம்மா வழி கோயில்) அப்புறம் சிவகாசி(அப்பா வழி கோயில்).
பிளான் படி கிளம்பி மதியம் சுமார் 2 மணி அளவில் சாலிச்சந்தையை அடைந்தோம். அம்மா வழி சொந்தங்கள் அனைவரும் வந்துவிட எங்கள் கும்மாளம் ஆரம்பமானது. கொஞ்ச நேரத்தில் ஊர் பெருசு ஒருவர் மைக்கில் "ஆறு மணிக்கு அனைவரும் சாமிக் கும்பிடவருமாறு அழைத்தார்
ஆறு மணிக்கு அனைவரும் சன்னதியை அடைந்தோம், பூஜை ஆரம்பமானது. பூஜை துவங்கிய சில நிமிடங்களிலேயெ எங்கள் குடும்பத்தார் அமர்ந்துதிருந்த இடத்திற்க்கு அருகில் இருந்த ஒரு அம்மையார் மேல் ஆத்த வந்து இறங்கினாள்......."டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" ஒரு சவுண்டு மொத்த கூட்டமும் ஆடிப்போனது.
நாமக்கு சாமி நம்பிக்கையுன்டு ஆன, சாமியார் மற்றும் சாமியாடுறவங்க மேல சுத்தம நம்பிக்கையில்ல, சரி இந்த அம்மா என்னதான் செய்யிதுனு பாத்துக்கிட்டு இருந்தேன்.. சரியா இரண்டு நிமிஷம் கழிச்சு அந்த அம்மா அருகில் இருந்த தன் மகளை பார்த்து சாமியாடிக் கொண்டே "வாட்ச கழட்டு.... வாட்ச கழட்ட்ட்ட்ட்ட்ட்டுடுடுடுடுடு..." என்று கையை ஆட்டினர் அத நான் பார்த்துட்டேன்.
அப்பொழுது தோன்றிய தான் இந்த "Operation Autograph" idea (உபயம் :- ஹுட்ச் கலக்கபோவது யாரு ஈரோடு மகேஸ் - Vijay TV version) அதாவது, இப்போ இந்த அம்மாக்கிட்ட ஒரு பேப்பர்,பேனா குடுத்து கையெளுத்து போட சொன்னா, "பால்பழகாரி அம்மன்னு" போட்ட உண்மையான ஆத்தா, அப்படியில்லாம, அவுங்க பெயரயே கையெளுத்தா போட்ட இது போலிச் சாமி.
இத கேட்டவுடன் மாமா ஒருத்தரு உடனே, பேப்பரும் பேனாவும் கொடுத்து மாப்ளே இப்பொவே கையெளுத்து வாங்குட, இன்னைக்கு இரண்டுல ஒண்ணுப் பார்த்துடுவோம்னு கொஞ்சம் உசுப்பேத்திவிட, ஆயுதங்களுடன்(பேப்பர்,பேனா)ஆத்தாவை நெருங்கினேன்.
தன் கையிலிருந்து வாட்ச் கழட்டப்பட்டு இருந்ததால் அந்த அம்மா உச்ச நிலையில் சாமியாடிக் கொண்டுருந்தார். நான் அருகில் செல்ல செல்ல அவரின் வேகம் கூடியது, ஒரு நிலையில் தட்டில் இருந்த எலுமிச்சம்பழத்தை ஒன் ஒன்ன முழுதாக வாயில் போட்டுக் கடிக்க ஆரம்பித்தார்.
அடுத்ததாக தட்டிலிருந்து குங்குமத்தை எடுத்து ஒருவர் மீது தூவி நீ நெனச்சது நடக்கும்னு அருள் வாக்கு சொல்லிக் கொண்டுருந்தார்.
அதுவரை பொறுமையாக இருந்த என் அம்மா, என்கிட்ட வந்து, வேண்டாம்பா தெய்வ குத்தமாயிடும்னு சொல்லிட்டு, மாமாவை பார்த்து "அவன் தான் சின்ன பையன்(நான் தாங்க அந்த சின்ன பையன்) நீயும் அவன் கூட சேர்ந்து இப்படிப் பண்ணலாமா சும்மா இருங்கப்பா"னு சொல்லி பேப்பரையும்,பேனாவையும் வாங்கி வைத்து விட்டார்.
எங்க வீட்டு அரை டிக்கெட் ஒன்னு வந்து "போங்க மச்சான் நீங்க கண்டிப்பா கையெளுத்து வாங்குவீங்கனு நெனச்சென் இப்படி ஏமாத்திடிங்கலே... நீங்க வேஸ்டுனு" திரும்பவும் உசுப்பேத்திவிட.. வேண்டாம் பாப்பா நாம அடுத்த வருசம் வாங்குவோம்னு சொல்லி சமதானப்படுத்திவிட்டு இடத்தை காலி செய்தேன்.
நான் செய்தது சரியோ தப்போ, ஒரு கால் மணி அனைவரும் மகிழ்சியா இருந்தோம், அதனால் ஒரு முடிவுக்கு வந்தேன். அடுத்து செல்ல இருக்கின்ற சிவகாசி கோயிலிலும் இந்த "Operation Autograph" தொடரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
சிவகாசி நோக்கி பயனம் தொடங்கியது.....
(விஜய் டிவி குற்றம் நிகழ்ச்சி விளம்பரம் போல் படிக்கவும்)
சிவகாசியில் நடந்தது என்ன சிறப்பு அறிக்கை விரைவில் Operation Autograph-II